Discover the Most Beneficial Dried Fish in India

மீன் மற்றும் கருவாடுகளில் உள்ள அதி அற்புத மான மருத்துவ குணங்கள் :-


அசைவ உணவு வகைகளில் தனக்கென நீங்கா இடம்பிடித் திருக்கும் மிகச்சிறந்த உணவு எது என்று கேட்டால் அது மீன்,கருவாடு என்றே சொல்லலாம். அத் தகைய மீன்களில் உள்ள மருத்துவ குணங்களை பட்டியலிட்டுள்ளனர் மீன் உணவு ஆராய்சியாளாகள்..

1.மீன்உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச் சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர் ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத் தவிர் க்க வழிசெய்கிறது.

2. மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத் திறனுக்கும் உதவு கிறது.

3. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்ப தால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு களைக் குறைக்கிறது. மேலு ம் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்ப தோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அ திகரிக்க வழிவகைசெய்கிறது.

4.மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங் கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மா ர்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோ ய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையி லும் குறைக்கிறது.

5. மீன்களில் அடங்கியுள்ள கால்சி யம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷி யம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதி கரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச் சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோ டினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

6. பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் மற்றும் கருவாடு உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிக ரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

7.மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படு ம் வாய்ப்பு குறைகிறது.

8. மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட் கொள்ளும்வயோதிகர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது.

9. தொடர்ந்து மீன் உணவுகள் உண்ணும் பழக்க மானது எலும்புத் தேய்வு, சொரி சிர ங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற் படும் நோய்கள்போன்றவற்றைக் குறைக்க வழி செய் கிறது.

இப்படி மீன் உணவுகளில் அடங்கியுள்ள மருத்துவப் பயன்களை அடுக்க ஆரம்பித்தால் நீண்டு கொண்டே இருக்கு மளவுக்கு அடுக்கடுக்காய் பலன்கள் கொட்டிக்கிடக்கி ன்றன. மீன்கள் மட்டும் இன்றி இரால், நண்டு என்ற ஒவ்வொரு கடல் உணவு வகைகளிலும் பலப்பல மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!

சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

அக்கறையுடன்
www.karuvadukadai.com

#dryfish
Free Shipping for prepaid orders / 0 charges