சீலா கருவாடு சிறப்பின் விளக்கம்

மீன்களிலும் கருவாட்டிலும் தனிச்சிறப்பு பெற்ற வகை சீலா என்று அழைக்கப்படும் மீன்வகை தான்.அதுவும் வங்க கடல் பகுதிகளில் கிடைக்கும் சீலா மீனுக்கு தனிசுவை உண்டு என்பதை அதை சுவைத்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
தென் தமிழகத்தில் சீலா என்று அழைக்கப்படும் இந்த மீனுக்கு வட தமிழகங்களில் வஞ்சரம்,நெய் மீன் என்று பல பெயர்களில் அழைக்கடுகிறது. பலபெயர்களில் அழைக்கபடுவதால் பலரும் இரண்டாம் தர மாற்று மூன்றாம் தர மீன்களை சீலா என்று நினைத்து வாங்கி ஏமாறுவதுண்டு.
இந்த மீனின் தலைபகுதி வால்பகுதி மற்றும் தோல் நிறைத்தை வைத்தே சீலா என்று உறுதிபடுத்த முடியும் எனவே தலையும் வாலும் இல்லாத மீனை எந்த மீன் என்று கண்டுபிடிப்பது மீனவர்களால் மட்டுமே முடியும்.
இந்த சீலா கருவாட்டை சமைக்கும் போது இதன் சதைப்பகுதிகள் கரைந்து சுவையையும் வாசனையையும் அதிகபடுத்தும் எனவே வாசனை ஊரைக்கூட்டும் என்பது முன்னோர்கள் சொன்னது.
ஒரிஜினல் சீலா மீன் கருவாடு சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் 1500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யபடுகிறது.
தூத்துக்குடி கடலில் பிடிக்கபடும் மீன்கள் இங்கேயே கருவாடாக்கபட்டு விற்பனை செய்யபடுவதால் 1300 ரூபாய்க்கு கிடைக்கிறது .