தூத்துக்குடி கருவாடு!!

கருவாடு என்பது பலர் அறிந்திருக்க வாய்புண்டு ஆனால் நாம் உண்ணும் அசைவ உணவுகளில் கொழுப்பு சத்து மிக மிக குறைவான உணவு கருவாடு தான் என்பது பலரும் அறியாதது.
வாரத்தில் ஒரு நாளாவது சிக்கன் மட்டன் என கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் நாம் சுவை நிறைந்த உடலுக்கு ஆரோக்கியமாண கருவாட்டை மறந்துவிட்டோம் என்பதே கசப்பான உண்மை.!
நம்முன்னோர்கள் செவ்வாய் வெள்ளி தவிர்த்து பெரும்பான்மையான நாட்களில் பழைய கஞ்சி முதற்கொண்டு சாம்பார் வரை அனைத்துடனும் கருவாடு கூட்டுடன் சேர்த்து சாப்பிடுவதை பார்த்திருப்பிர்கள். தினமும் உண்ணும் அசைவ உணவுகளில் கருவாடு தான் நமது வீட்டை ஆக்கிரமித்திருக்கும்.!
அதுபோல இந்தியாவின் கடலோர பகுதி ஊர்களில் கிடைக்கும் மீன்களில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வகை மீன்கள் தனி சுவையுடன் இருப்பதுண்டு.அந்த வகையில் தூத்துக்குடி கருவாடு என்றால் அதற்கென தனி சிறப்பும் சுவையும் உண்டு என்பது உலகறிந்த விஷயம்.கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவு பொருளாகவும் குழந்தை பேறுக்கான மருத்துவ உணவாகவும் கருவாடு தமிழர்களின் மிக முக்கிய உணவு பொருளாக விளங்குகிறது.தூத்துக்குடி கருவாடு மற்றும் மீன் வகைகள் உலகின் பல நாடுகளுக்கும் பயணிக்கிறது என்பது தூத்துக்குடியின் பெருமைமிகு குறிப்புகளில் ஒன்று.நாம் விரும்பி உண்ணும் உணவுகள் பலருக்கு கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிதர்சனமான உண்மை.கால ஓட்டத்தில் பணிசுமையில் கிடைத்ததை உண்னும் நிலைக்கு காலம் நம்மை கடத்திவிட்டது.வெளியூர்களில் வசிக்கும் கருவாடு பிரியர்களுக்காகவே இந்த தளம் உருவாக்கபட்டுள்ளது. இந்தியாவின் அசைவ உணவுகளில் மிக குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு கருவாடு என்பது குறிப்பிட தக்கது. தூத்துக்குடி கடலில் கிடைக்கும் மீன் வகைகளை சுத்தமான முறையில் உலரவைத்து எங்கள் கடையில் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் பெரும்பாலான பேர் வெளியூர்கார்கள் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க அவர்களின் ஆலோசனைப்படி இந்ந தளத்தை உருவாக்கியுள்ளோம்.அனைத்து வகையான கருவாடு வகைகளும் உங்கள் இல்லத்திற்கு வரும் வகையிலும் அங்கேயே பணம் செலுத்தும் (cash on delivery) வகையிலும் ஏற்பாடு செய்துள்ளோம்.
குறைந்தபட்சம் ஒரு கிலோ அல்லது அரை கிலோ ஆர்டர் செய்வது உங்கள் வீட்டிற்கே கருவாடை வரவழைத்து கொள்ளலாம். ஒரு ஆர்டருக்கு 60 ரூபாய் கொரியர் செலவு ஆகிறது. சுத்தமான முறையில் Silver foil பேக்கிங் செய்து தரமான முறையில் எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.பேக்கிங் கட்டணம் எதுவும் கிடையாது.
ஆரோக்கியமான உணவை மருந்து..!!
வாழ்க வளமுடன் !நலமுடன்!!

கார்பரேட் கம்பெனிகளின் மார்கெட்டிங் பெருகிவிட்ட இந்த காலத்தில் எங்களை போன்ற சிறிய கருவாடு கடைக்கு எங்கள் தரமான பொருளுக்காக எங்களிடம் ஆன்லைன் மூலம் தொடர்ந்து ஆர்டர் தரும் எங்களது ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் இதயத்திலிருந்து நன்றிகள்!